சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலை ஆன நிலையில் சற்று முன் அவர் சென்னைக்கு வருவதற்காகக் பெங்களூரில் இருந்து கிளம்பினார். அவரது வரவால் அதிமுகவில் சில சலசலப்புகள் எழுந்தன. அதிமுகவில் பொறுப்பில் இருக்கும் சிலரே அவருக்கு போஸ்டர்களும் அடித்து ஒட்டினர். அவருக்கு ஆதரவராகச் செயல்படுவர்கள் மீது அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், நேற்று ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு சசிகலாவை பலரும் சென்று சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் சீமான், பாரதிராஜா, அமீர் எம்.எல்.ஏ தனியரசு ஆகியோர் அவரது இல்லத்தில் சென்று சந்தித்தனர். இந்நிலையில் நடிகர் பிரபு திநகரில் வசித்துவரும் சசிகலாவைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.