கமல்ஹாசனின் ‘விக்ரம் ரிலீஸ் எப்போது? ராஜ்கமல் நிறுவனம் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (12:00 IST)
கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படம் ரிலீஸ் எப்போது என்பது குறித்த அறிவிப்பை மார்ச் 14ஆம் தேதி வெளியிடவுள்ளதாக  ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
ராஜ்கமல்‌ ஃபிலிம்ஸ்‌ இண்டர்நேஷனல்‌ மற்றும்‌ உலகநாயகன்‌ கமல்ஹாசனின்‌ அடுத்த வெள்ளித்திரைப்‌ பயணமான -விக்ரம்‌: படத்தின்‌ படப்பிடிப்பு வேலைகள்‌ நிறைவடைந்துள்ளன, விஜய்‌ சேதுபதி மற்றும்‌ பஹத்‌ ஃபாஸில்‌ ஆகியோரும்‌ இணைந்து நடித்திருக்கும்‌ இந்தத்‌ திரைப்படம்‌ 2022ஆம்‌ ஆண்டின்‌ அதிகம்‌. எதிர்பார்க்கப்படும்‌ படங்களில்‌ முக்கியமானதாக இருக்கிறது. நடிப்பின்‌ சிகரங்களான மூன்று நட்சத்திரங்களுடன்‌, இன்னொரு நட்சத்திரப்‌ பட்டாளமே இணைந்து கடந்த 9 மாதங்களாகக்‌ கடுமையாகப்‌ பணியாற்றியிருப்பதால்‌, “விக்ரம்‌ பல திரையுலக சாதனைகளைப்‌ படைக்கும்‌ திரைப்படமாக இருப்பதற்கான எல்லா
அம்சங்களையும்‌ கொண்டுள்ளது.
 
லோகேஷ்‌ கனகராஜ்‌ இயக்கத்தில்‌, அனிருத்‌ இசையமைப்பில்‌ -விக்ரம்‌ திரைப்படத்தின்‌ பிரதான படப்பிடிப்பு ஆகஸ்டு 2021ல்‌ தொடங்கியது, லாக்டவுன்‌ காலகட்டத்தின்‌ நெருக்கடிகள்‌, புதிய வைரஸால்‌ படப்பிடிப்பே கைவிடப்படக்கூடிய சூழல்‌ ஆகியவற்றைக்‌ கடந்து, களைப்புக்கு அஞ்சாமல்‌ அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளுடன்‌ படக்குழுவினர்‌ தீவிரமாக உழைத்தனர்‌. இந்தப்‌ படத்தின்‌ தனிச்‌சிறப்பு, உலகநாயகன்‌ கமல்ஹாசன்‌ வெள்ளித்திரையில்‌ தோன்றுவதுதான்‌, உலகெங்கிலும்‌ உள்ள அவரது ரசிகப்‌ படையினர்‌ அந்தத்‌ தருணத்துக்காக ஆரவாரத்துடன்‌ காத்திருக்கிறார்கள்‌.
 
உச்ச நட்சத்திரங்களுடன்‌, நரேன்‌, செம்பன்‌ வினோத்‌, காளிதாஸ்‌ ஜெயராம்‌, மற்றும்‌ காயத்ரி ஆகியோரும்‌ முக்கியக்‌ கதாபாத்திரங்களில்‌ நடித்திருக்கிறார்கள்‌. தயாரிப்பாளர்கள்‌ படம்‌ தியேட்டர்களில்‌ ரிலீஸ்‌ ஆகவிருக்கும்‌ தேதியை மார்ச்‌ 14 அன்று காலை 7 மணிக்கு அறிவிக்கவிருக்கிறார்கள்‌. விக்ரம்‌ திரைப்படத்தை, பன்முகத்‌ திறமையாளரான கமல்ஹாசன்‌ மற்றும்‌ ஆர்‌. மகேந்திரன்‌ இணைந்து தயாரிக்கிறார்கள்‌.
 
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்