நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் மார்ச் 25ஆம் தேதி ரிலீஸாகும் என கூறப்பட்டு இருந்தாலும் அந்த தேதியில் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் ரிலீஸ் ஆவதால் சிவகார்த்திகேயன் தனது படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றுவார் என்று கூறப்பட்டது மேலும் ஆர்.ஆர்.ஆர். படத்தை ரிலீஸ் செய்யும் லைக்கா நிறுவனம்தான் டான் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் என்பதால் கண்டிப்பாக ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்படும் என்று கூறப்பட்டது
இந்த நிலையில் சற்று முன் சிவகார்த்திகேயன் டான் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மே 13 என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதனை அடுத்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கூறியுள்ளனர். மேலும் டான் படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான சிவகார்த்திகேயனுக்கு லைகா நிறுவனம் நன்றியும் தெரிவித்துள்ளனர். ஆர் ஆர் ஆர் படத்தின் ரிலிஸுக்காக தன்னுடைய டான் படத்தின் ரிலிஸ் தேதியை தள்ளிவைத்துக் கொண்ட சிவகார்த்திகேயனின் பெருந்தன்மைக்கு நன்றி எனக் கூறியுள்ளனர்.