’இந்தியன் 2’ டிரைலர் எப்போது? லைகா நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Siva
ஞாயிறு, 23 ஜூன் 2024 (11:12 IST)
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் ஜூலை 12ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகளும் ஆரம்பித்துவிட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக ’இந்தியன் 2’ படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகும் தேதியை லைகா நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தின் டிரைலர் வரும் 25ஆம் தேதி வெளியாகும் என்றும், சேனாதிபதி உங்களை பார்க்க வருகிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது ட்ரெய்லர் அறிவிப்பு வெளியாகி உள்ளதை அடுத்து இந்த ட்ரெய்லர் வீடியோவை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளன

கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரத்னவேலு, ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்