’சூரரை போற்று’ இந்தி ரீமேக்கின் டிரைலர்.. அப்படியே ஈயடிச்சான் காப்பி என விமர்சனம்..!

Siva

செவ்வாய், 18 ஜூன் 2024 (17:47 IST)
ஒரு மொழியில் வெற்றி பெற்ற திரைப்படம் இன்னொரு மொழியில் ரீமேக் செய்யப்படுகிறது என்றால் அந்த மொழிக்கேற்றவாறு, அந்த மொழியின் ரசிகர்களுக்கு ஏற்றவாறு சில காட்சிகள் மாற்றி அமைக்கப்படும். 
 
ஆனால் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான ’சூரரை போற்று’ திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்ட நிலையில் அதன் டிரெய்லர் இன்று வெளியாகி உள்ளது. 
 
சர்ஃபைரா என்ற டைட்டில் கொண்ட இந்த படத்தின் இரண்டு நிமிடங்களுக்கு மேலான டிரைலர் வெளியாகியுள்ள நிலையில் இந்த ட்ரைலரை பார்க்கும்போது அப்படியே தமிழில் உள்ள காட்சிகள் தான் ஹிந்தியில் உள்ளதை பார்த்து தமிழ் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இருப்பினும் இந்திய ஆடியன்ஸ்களுக்கு இது புதுமையாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
மேலும் இந்த படத்தில் சூர்யா ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள காட்சியும் இந்த ட்ரெய்லரில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிய இந்த படத்தில் அக்ஷய் குமார் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்