இன்று வெளியாகிறது சூர்யாவின் பாலிவுட் பட டிரைலர்!

vinoth

செவ்வாய், 18 ஜூன் 2024 (11:49 IST)
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான சூரரை போற்று என்ற திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அக்‌ஷய் குமார் சூர்யா வேடத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு முழுவதும் நடந்து கடந்த ஆண்டே படம் தயாரானாலு இன்னும் ரிலீஸாகவில்லை.

’சர்ஃபிரா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாகிறது.  இந்த படத்தில் சூர்யா ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். படத்தில் அவர் மூன்று காட்சிகள் வருவார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தில் கதையை வாய்ஸ் ஓவரில் விவரிக்கும் கதை சொல்பவராக சூர்யா நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் சூர்யா பாலிவுட் திரைப்படத்தில் அறிமுகமாகிறார்.

இந்நிலையில் இன்று இந்த படத்தின் டிரைலர் வெளியாகிறது. தொடர்ந்து தோல்விப் படங்களாகக் கொடுத்து வரும் அக்‌ஷய்குமாருக்கு இந்த படமாவது கைகொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்