விக்ரம் வெற்றியால் மீண்டும் உயிர்பெறும் கமல் படங்கள்… காத்திருக்கும் லைன் அப்!

Webdunia
திங்கள், 13 ஜூன் 2022 (15:49 IST)
கமல் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் விக்ரம். இந்த படத்தின் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார்.  இந்த படம் கடந்த 13 ஆம் தேதி ரிலீஸாகி பிளாக்பஸ்டர் ஹிட்டாகி வருகிறது. இதுவரை 250 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. திரையரங்குகள் மூலமாக கிட்டத்தட்ட 300 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த வெற்றியால் கமலின் ட்ராப் செய்யப்பட்ட படங்களை தொடங்க லைகா உள்ளிட்ட தயாரிப்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாம். அதில் சபாஷ் நாயுடு, தேவர் மகன் 2 ஆகிய படங்களும் அடங்கும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்