நான் விரும்பிப் பாடவில்லை… இயக்குனர்கள்தான் வற்புறுத்துகிறார்கள் –அனிருத் பகிர்ந்த சீக்ரெட்!

vinoth

செவ்வாய், 22 ஜூலை 2025 (15:10 IST)
தமிழ் சினிமாவில் தற்போது அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராக இருந்து வருகிறார் அனிருத். இதன் காரணமாக முன்னணி நடிகர்கள் படங்களுக்கு மட்டும்தான் அவர் இசையமைத்து வருகிறார். தமிழ் தாண்டியும் தெலுங்கு மற்றும் இந்தி சினிமாக்களுக்கும் இசையமைத்து வருகிறார். தற்போது கூலி,ஜனநாயகன் மற்றும் ஜெயிலர் 2 ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

அனிருத் இசையில் உருவாகும் பெரும்பாலானப் பாடல்களை அவரே பாடுகிறார் என்பது அவர் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டாக உள்ளது. அதற்கேற்றார்போல அவர் இசையில் உருவான பாடல்களில் பாதிக்கு மேல் அவரேப் பாடியுள்ளார்.

இந்த விமர்சனத்துக்கு இப்போது அனிருத் பதிலளித்துள்ளார். அதில் “நான் முறைப்படி பாட கற்றுக்கொள்ளவில்லை. நான் என் ஆரம்பகால படங்களில் பாடியதில்லை. இயக்குனர் கேட்டுக் கொண்டதால்தான் ‘எதிர் நீச்சல்’ படத்தில் பாடினேன். நான் டம்மி ட்ராக் அனுப்பும்போது அதை நிறையமுறை கேட்கும் இயக்குனர்கள் பின்னர் பாடகரை வைத்துப் பாடி அனுப்பினால் என் குரலிலேயே பாடல் இருக்கட்டும் என வற்புறுத்துகிறார்கள். நான் பாடிய பாடல்களில் 90 சதவீத பாடல்களை நான் பாடவேண்டும் என்று நினைத்ததேயில்லை” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்