உண்மையில் நடப்பதைப் பற்றிதான் நான் எழுதி இருக்கிறேன்… ‘பத்தல பத்தல’ பாடல் குறித்து கமல் விளக்கம்

திங்கள், 13 ஜூன் 2022 (14:26 IST)
கமல் எழுதி பாடிய பத்தல பத்தல பாடல் இணையத்தில் மிகப்பெரிய ஹிட்டானது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் விக்ரம். இந்த படத்தின் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார்.  இந்த படம் இன்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “பத்தல.. பத்தல..” பாடலில் இடம்பெற்றிருந்த ‘ஒன்றியத்தின் தப்பாலே’ போன்ற அரசியல் வரிகள் படத்தில் இடம்பெறாமல் நீக்கப்பட்டன. முன்னதாக இந்த வரிகள் ஒன்றிய அரசை விமர்சிக்கும் விதமாக உள்ளதாக கண்டனக்குரல்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் கமலிடம், அந்தவரிகள் குறித்து கேட்கப்பட்ட போது “நாட்டில் உண்மையாக நடப்பதைதான் நான் அந்த பாடலில் எழுதியுள்ளேன்” எனப் பதிலளித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்