லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பஹக் பாசில் ஆகியோர் நடித்துள்ள படம் விக்ரம், இந்த படத்தில் சூர்யா ஒரு முக்கிய தோற்றத்தில் சில நிமிடங்கள் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி இந்த படம் வெளியான நிலையில் ரசிகர்களிடையே நல்ல பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இதுவரை கமல் படங்கள் செய்யாத வசூல் சாதனையைப் படைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை உலகளவில் 250 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் வெளியாகி இரண்டு வாரத்தில் தற்போதும் நல்ல வருகையோடு பல திரையரங்குகளில் ஓடி வரும் நிலையில் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக இருந்த திரைப்படங்கள் தங்கள் ரிலீஸை தள்ளி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் அருண் விஜய்யின் யானை மற்றும் பார்த்திபனின் இரவின் நிழல் ஆகிய திரைப்படங்களும் உள்ளதாக சொல்லப்படுகிறது.