ரஜினியின் ‘கூலி’ படத்தில் கமல் மகள் மட்டுமல்ல.. கமலும் இருக்கின்றாரா? ஆச்சரிய தகவல்..!

Siva

செவ்வாய், 22 ஜூலை 2025 (16:21 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி, ரிலீசுக்கு தயாராகி கொண்டிருக்கும் 'கூலி' திரைப்படத்தில் கமல்ஹாசனை இணைக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
ஏற்கனவே 'கூலி' படத்தில் ரஜினிகாந்துடன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், தற்போது கமல்ஹாசனையும் படத்தில் இணைக்க லோகேஷ் கனகராஜ் முயன்று வருகிறார். 
 
இதுகுறித்து வெளியான தகவலின்படி, படத்தின் ஓபனிங் காட்சிகளுக்கு கமல்ஹாசனின் வாய்ஸ் ஓவர் கொடுக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளாராம். இதற்காக அவர் ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
முன்னதாக, மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் கமல்ஹாசன் வாய்ஸ் ஓவர் கொடுத்தார், அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. அதேபோன்ற ஒரு வாய்ஸ் ஓவரை கமல்ஹாசன் 'கூலி' படத்திற்கும் கொடுக்க இருப்பதாக பரவும் தகவல், ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமின்றி, கமல் ரசிகர்களுக்கும் பெரும் ஆச்சரியத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 
 
இரு பெரும் நட்சத்திரங்களின் இந்த அரிய கூட்டணி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்