ஹிட் பாடலை தலைப்பாக வைத்த காஜல் பட தயாரிப்பாளர்!

Webdunia
திங்கள், 12 ஜூலை 2021 (16:03 IST)
தனுஷ் நடித்த மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் இந்தியாவிலேயே அதிகம் பேரால் பார்க்கப்பட்ட பாடலாக இணையத்தில் சாதனை படைத்தது.

தனுஷ் மற்றும் சாய்பல்லவி நடித்த மாரி 2 படம் அட்டர் ப்ளாப் ஆனாலும், அந்த படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடலாலயே பல கோடிகளை சம்பாதித்திருக்கும். ஏனென்றால் யு டியூபில் சுமார் 100 கோடி பேரால் அந்த பாடல் பார்க்கப்பட்டது. பெரியவர்களில் இருந்து குழந்தைகள் வரை ரவுடி பேபி என்ற வார்த்தை இப்போது பிரபலமாகியுள்ளது.

இந்நிலையில் அடுத்து காஜல் அகர்வால் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்துக்கு ரவுடி பேபி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் ராஜா சரவணன் இயக்கும் இந்த படத்தை ரமேஷ் பொ பிள்ளை தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் மற்ற கதாபாத்திரங்களில் ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், லட்சுமி ராய் போன்றோர் இந்த படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்