இன்னும் தாமதம் ஆகிறதா கைதி 2… சூர்யா லோகேஷ் இணையும் படம்!

Webdunia
சனி, 19 ஆகஸ்ட் 2023 (09:10 IST)
மாநகரம், கைதி ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய் மற்றும் கமல் ஆகியோர் நடிப்பில் மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களை இயக்கினார். இந்த இரு படங்களின் வெற்றி அவரை மோஸ்ட் வாண்டட் இயக்குனராக்கியது.

இந்நிலையில் அவர் இயக்கத்தில் கைதி 2 படம் வெளியாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது. ஆனால் அடுத்தடுத்து அவர் வேறு படங்களில் ஒப்பந்தம் ஆவதால் கைதி 2 படம் இப்போதைக்கு உருவாகுமா என்ற சந்தேகம் எழுந்தது.

லோகேஷ், அடுத்து ரஜினிகாந்தை இயக்கும் படத்துக்கு பிறகு கைதி 2 உருவாகும் என சொலல்ப்பட்டது. ஆனால் அதற்கு முன்பாக அவர் சூர்யாவை வைத்து இயக்கும் ரோலக்ஸ் திரைப்படம் உருவாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் கைதி 2 திரைப்படம் மேலும் தாமதமாகும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்