விஜய்யின் லியோ படத்தோடு மோதும் மூன்று மாஸ் ஹீரோக்களின் படங்கள்!
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (07:04 IST)
விஜய் நடிப்பில் லியோ லோகேஷ் இயக்கி வரும் லியோ திரைப்படம் இந்த ஆண்டில் அதிகமாக எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இந்த படத்தை அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளனர். இப்போது லியோ படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் லியோ படத்துக்கு தமிழக அளவில் எந்தவொரு படமும் போட்டியில்லை என்றாலும், தென்னிந்திய அளவில் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கடுமையான போட்டி இருக்கும் என சொல்லப்படுகிறது.
அக்டோபர் 19 ஆம் தேதி லியோ ரிலீஸாகும் நாளில் தெலுங்கில் பாலகிருஷ்ணாவின் பகவத் கேசரி மற்றும் ரவி தேஜாவின் டைகர் நாகேஸ்வர ராவ் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அதே போல கர்நாடகாவில் சிவராஜ் குமாரின் கோஸ்ட் திரைப்படமும் ரிலீஸாகின்றது.