நம்பர் ஓன் ட்ரெண்டில் சூர்யாவின் "சிறுக்கி சீனிக்கட்டி சிணுங்கி சிங்காரி" பாடல்!

Webdunia
சனி, 6 ஜூலை 2019 (14:47 IST)
நடிகர் சூர்யா 'என்ஜிகே' படத்திற்கு பிறகு நடித்து வரும் படம் காப்பான். கேவி ஆனந்த் இயக்கி வரும் இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 
 

 
இதில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் , நடிகை சாய்ஷா மற்றும் அவரது கணவர் ஆர்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இதில் மோகன்லால் பிரதமர் நரேந்திர மோடி வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் 30ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தில் கிராமத்து பின்னணியில் இடம்பெற்றுள்ள "சிறுக்கி சீனிக்கட்டி சிணுங்கி சிங்காரி" என்ற லிரிகள் வீடியோ பாடல் நேற்று இணையத்தில் வெளியாகி பட்டைய கிளப்பி வருகிறது. 
 
ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்பாடல் கேட்டவுடனேயே துள்ளிக் குதித்து ஆட தோன்றுகிறது. தற்போது இந்த பாடல் வீடியோ வெளியான ஒரே நாளில் இணையத்தில் நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் வலம் வந்துகொண்டிருக்கிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்