தேசிய நெடுஞ்சாலைகள் நடுவே அரளிப் பூச்செடி வைப்பது எதற்கு ? ஓ.பி.எஸ் விளக்கம்

திங்கள், 1 ஜூலை 2019 (20:06 IST)
நம் நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் நடுவே அரளி செடிகள் எதற்காக நடப்பட்டுள்ளது என்படு குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணைமுதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் இன்று சட்டசபையில் தெரிவித்தார்.
அரளிப்பூச் செடிகளை தேசிய நெடுஞ்சாலைகள் இடையே வளர்ப்பதால் எந்த பயனுமில்லை என்று திமுக உறுப்பினர் உதய சூரியன் பேசினார். இதற்கு பதிலளித்த ஓ. பன்னீர் செல்வம் கூறியதாவது: அரளிப்பூச்செடிகளை சாலைகல் நடுவே வளர்ப்பதன் மூலம், மறுசாலையில் சாலைத் தடுப்புக்கு எதிர்ப்புறம் வாகனங்களிம் முகப்பு விளக்கு வெளிச்சமானது எதிர்த்திசையில் செல்லும். அதனால் வாகன் ஓட்டிகளுக்கு பாதிக்காது தடுக்கப்படும் என்று தெரிவித்தார். 
 
மேலும் வாகனங்களில் இருந்து வெளியேறும் கார்பண்டை ஆக்ஸைடை அரளி பூச்செடிகள் ஈர்த்துக்கொண்டு நன்மைதரும் ஆக்சிஜனை வெளியிடும் என்ற காரணத்தினால்தா அந்தப் பூச்செடிகள் நெடுஞ்சாலைகள் நடுவில்  வைக்கப்படுள்ளதாகவும் சாதுர்யமாக பதிலளித்தார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்