2018 பட இயக்குனரின் அடுத்த படத்தில் விக்ரம் & விஜய் சேதுபதி?

Webdunia
வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (09:31 IST)
இந்த ஆண்டு மலையாளத்தில் உருவாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற  திரைப்படம் டோவினோ தாமஸ் நடித்துள்ள 2018. கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை ஒட்டி இந்த படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஜூட் ஆண்டனி. இந்த படம் சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்து மலையாள சினிமாவின் அதிகபட்ச வசூல் செய்த படமாக உருவாகியுள்ளது.

இதையடுத்து அந்த படத்தின் இயக்குனர் ஜூட் ஆண்டனி அடுத்து லைகா நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தில் தமிழ்நடிகர்கள் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தில் நடிக்க விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரோடு பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. மேலும் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்