‘2018’ பட இயக்குனரோடு கைகோர்க்கும் விஜய் சேதுபதி?

திங்கள், 17 ஜூலை 2023 (08:16 IST)
இந்த ஆண்டு மலையாளத்தில் உருவாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற  திரைப்படம் டோவினோ தாமஸ் நடித்துள்ள 2018. கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை ஒட்டி இந்த படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஜூட் ஆண்டனி. இந்த படம் சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்து மலையாள சினிமாவின் அதிகபட்ச வசூல் செய்த படமாக உருவாகியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ஜுட் ஆண்டனியின் அடுத்த படத்தை தயாரிக்க உள்ளது லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம். இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் அவர் அடுத்து இயக்கும் புதிய படத்தில் நிவின் பாலி மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் உருவாகும் என தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்