மலையாள சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் சுராஜ் வெஞ்சரமூடு. இவர் ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன், டிரைவிங் லைசன்ஸ், தொண்டிமுதலும் திருக்சாக்ஷியும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இவர் எர்ணாகுளத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு காரில் சென்ற போது, இவர் கார் மோதி மலப்புரத்தைச் சேர்ந்த ஷரத் என்பவர் காயமடைந்தார். அவருக்கு காலில் பலத்த காயமேற்பட்ட நிலையில் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.