நாச்சியார் படத்தில் போலீசாக நடித்ததை தொடர்ந்து, அடுத்த படத்தில் ஜோதிகா ரேடியோ ஜாக்கியாக அடுத்து படத்தில் நடிக்க உள்ளார்.
ஜோதிகா சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகு பல வருடங்களாக திரையுலகத்துக்கு முழுக்கு போட்டு இருந்தார். இந்த நிலையில் மீண்டும் சினிமாவில் அடுத்த ரவுண்ட் வருகிறார். 36 வயதினிலே, மகளிர் மட்டும் ஆகிய படங்களைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் இவர் நடிப்பில் வந்துள்ள நாச்சியார் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இந்நிலையில் இவர் வித்யா பாலன் நடித்து பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான தும்ஹரி சுளு என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜோதிகா நடிக்கப்போவதாக தகவல் வெளியாயகிவுள்ளது.
இந்த படத்தில் வித்யாபாலன் ரேடியோ ஜாக்கியாக நடித்திருப்பார், அந்த கதாபாத்திரத்தில் தான் ஜோதிகா நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை ராதாமோகன் இயக்கப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.