நாச்சியார் - திரைவிமர்சனம்

வெள்ளி, 16 பிப்ரவரி 2018 (17:47 IST)
மற்ற இயக்குனர்களை போல் அல்லாமல், வணிக ரீதியாக நல்ல விமர்சனத்தை தரும் படத்தின் கதையை விரும்பும் குணம் கொண்டவர் பாலா. ஒரு படத்தை பல வருடம் இயக்கும் பாலா, வழக்கத்திற்கு மாறாக நாச்சியார் படத்தை குறுகிய கால படமாக எடுத்து வெளியிட்டுள்ளார்.
 
நேர்மையான, முரட்டுத்தனமான காவல்துறை அதிகாரி ஜோதிகா. இவரது காவல் நிலையத்திற்கு கற்பழிப்பு புகார் ஒன்று வருகிறது. இந்த கற்பழிப்புக்கு காரணம் ஜி.வி.பிரகாஷ் என நினைத்து அவரை கைது செய்து சிறுவர் காப்பகத்தில் சேர்க்கிறார்.
 
கற்பழிக்கப்பட்ட பெண்ணை தனது வீட்டில் வைத்து பாதுகாக்கிறார். மேலும், இந்த வழக்கு குறித்து ஜி.வி.பிரகாஷிடம் விசாரணையில் ஈடுபடும் போது குற்றவாளி அவர் இல்லை என்பதும் இருவரும் காதலர்கள் என்பதும் தெரியவருகிறது. இதனிடையில் கற்பழிக்கப்பட்ட  பெண்ணுக்கு குழந்தையும் பிறக்க, டிஎன்ஏ சோதனையும் ஜி.வி.பிரகாஷ் குற்றவாளி இல்லை என்பதை உறுதி செய்திறது. 
 
இதன் பின்னர் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபடுகிறார் ஜோதிகா. குற்றவாளியை கண்டுபிடித்தாரா? ஜி.வி.பிரகாஷ் உண்மை தெரிந்த பின்னர் அந்த குழந்தையை என்ன செய்தார்? என்பது படத்தின் மீதி கதை. 


 
ஜோதிகா வித்தியாசமான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் தனது வழக்கமான நடிப்பில் இருந்து வெளியே வந்து சிறப்பாக நடித்துள்ளார். படத்தின் மற்ற காதாபத்திரங்களும் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளனர். 
 
இளையராஜாவின் பின்னணி இசை பிரம்மிப்பு. பாலா தனது வழக்கமாக கதை நகர்த்தலில் இருந்து வெளியே வந்து சிறப்பான படத்தை கொடுத்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்