மூன்று நாளில் சுமார் ரூ.6 கோடி: அசத்திய நாச்சியார் வசூல்

Webdunia
திங்கள், 19 பிப்ரவரி 2018 (17:55 IST)
ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் இயக்குனர் பாலா இயக்கிய 'நாச்சியார்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இந்த படத்திற்கு கலவையான விமர்சனமே கிடைத்துள்ள போதிலும் வசூலில் சக்கை போடு போடுவதாக விநியோகிஸ்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது
 
சென்னையில் மட்டும் இந்த படம் மூன்றே நாட்களில் ரூ.1 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையான வசூலை பெற்றுள்ளது. அதேபோல் சேலம், செங்கல்பட்டு, கோவை ஆகிய நகரங்களிலும் இந்த படத்தின் மூன்று நாள் வசூல் ஒரு கோடி ரூபாயை தாண்டியுள்ளது
 
தமிழகம் முழுவதும் இந்த படம் மூன்றே நாட்களில் ரூ.6 கோடி வசூலை நெருங்கிவிட்டதாகவும், இன்னும் இந்த படத்திற்கு நல்ல கூட்டம் வந்து கொண்டிருப்பதால் வரும் வெள்ளிக்குள் ரூ.10 கோடி வசூலை நெருங்கிவிடும் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்