மீண்டும் தக் லைஃப் படத்துக்குள் வரும் துல்கர் & ஜெயம் ரவி… என்னப்பா நடக்குது?

vinoth
புதன், 17 ஏப்ரல் 2024 (07:57 IST)
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைஃப்'  படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன்னர்  செர்பியாவில் நடந்தது. இப்போது தேர்தல் வேலைகளில் கமல்ஹாசன் பிஸியாக இருப்பதால் படத்துக்கு பிரேக் விடப்பட்டுள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசனோடு திரிஷா, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த படத்தில் இருந்து துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் கொடுத்த தேதியில் தக்லைஃப் படக்குழுவினரால் அவர்களை வைத்து ஷூட்டிங் எடுக்க முடியாததால் அவர்கள் படத்தில் இருந்து விலகியதாக சொல்லப்படுகிறது. அவர்களுக்கு பதில் சிம்பு மற்றும் அரவிந்த்சுவாமி ஆகியோர் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் ஆகிய இருவரும் மீண்டும் தக் லைஃப் படத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தக் லைஃப் படக்குழு மேல் சிறு அதிருப்தியில் இருந்த அவர்கள் இருவரையும் மணிரத்னத்தின் மனைவி சுஹாசினி சமாதானப்படுத்தி மீண்டும் படத்துக்குள் வரவைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்