விஜய் நடிக்க, மணிரத்னம் இயக்க அந்த படத்தை நாங்கள் தயாரிக்க வேண்டும்… தயாரிப்பாளரின் ஆசை!

vinoth

திங்கள், 15 ஏப்ரல் 2024 (11:19 IST)
விஜய் தற்போது இயக்குனர் வெங்கட்பிரபு இயக்க, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் The GOAT படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் பெரும்பகுதி நிறைவடைந்துள்ள நிலையில் இறுதிகட்ட ஷூட்டிங்குக்காக ரஷ்யாவுக்கு சென்றுள்ளது.  இந்த படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு இந்த படத்தின் விசில் போடு என்ற பாடல் ரிலீஸானது.

இந்நிலையில் இந்த படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அளித்த நேர்காணலில் விஜய்யின் அடுத்த படம் பற்றி பேசியுள்ளார். அதில் “விஜய்யின் 69 ஆவது படத்தை இயக்குனர் யார் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அதை நான் இப்போது சொல்ல மாட்டேன். ஆனால் அந்த படத்தை மணிரத்னம் இயக்க எங்கள் நிறுவனமே தயாரிக்க வேண்டும் என்பதும் என் ஆசை.”எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்