பாட்ஷா தந்த உற்சாகத்தை ஜெயிலர் ஷோகேஸ் தந்துள்ளது… பாராட்டிய பிரபல நடிகர்!

Webdunia
வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (08:30 IST)
ரஜினிகாந்த் நெல்சன் கூட்டணியில் தற்போது ஜெயிலர் திரைப்படம் உருவாகி ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷ்ராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் என பெரிய பட்டாளமே நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி ஹிட்டாகியுள்ளன. இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரல் ஆகியுள்ளது.

இந்நிலையில் இந்த டிரைலரைப் பார்த்துள்ள பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் “ஒரு தலைவர் ரசிகனாக நான் இந்த ஷோகேஸைப் பார்த்து அளவில்லாத மகிழ்ச்சியில் உள்ளேன். பாட்ஷா என்னுடைய மிகப்பிடித்த படங்களில் ஒன்று.  நான் பாட்ஷா படத்தை பார்க்கும் எப்படி உற்சாகமாக உணர்வேனோ அதே உற்சாகத்தை இந்த டிரைலர் தந்துள்ளது.  பாட்ஷாவை விட இந்த படம் இரண்டு மடங்கு ஹிட் அடிக்கும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்