சமீபத்தில் நடந்த சினிமா ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில், "நான் 40 கல்யாணம் கூட செய்து கொள்வேன், ஆனால் நான்கை கூட இன்னும் தாண்டவில்லை," என வனிதா விஜயகுமார் நகைச்சுவையாக கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை வனிதா விஜயகுமார், விஜய் நடித்த சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி, அதன் பிறகு சில படங்களில் நாயகியாக நடித்தார். இதையடுத்து, கடந்த 2000 ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், அவரை விவாகரத்து செய்துவிட்டு, 2007 ஆம் ஆண்டு ஆனந்த் ஜெயராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு, ராபர்ட் மாஸ்டரை காதலித்த நிலையில், அவரிடம் இருந்தும் விலகினார். பின்னர், பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்ததாக கூறப்பட்ட நிலையில், அவரையும் அவர் விலகினார்.
இந்த நிலையில், தற்போது சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வரும் வனிதா விஜயகுமார் மகள் ஜோதிகாவையும் சினிமாவில் நுழைத்துள்ளார் என்பதும், தற்போது ஜோவிகா தயாரிப்பாளர் ஆகியுள்ளார் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜோவிகா தயாரிப்பில், வனிதா மற்றும் ராபர்ட் மாஸ்டர் நடிப்பில் “மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ்” என்ற படம் உருவாகி வருகிறது. இந்த நிலையில், “அலர்ட்” என்ற படத்தில் வனிதா விஜயகுமார் நடித்துள்ள நிலையில், இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது திருமணம் குறித்த கேள்விக்கு, "நான் 40 கல்யாணம் கூட பண்ணுவேன், ஆனால் இன்னும் நான்கு கூட எட்டவில்லை. ஏன் என்னை அசிங்கப்படுத்தறீங்க?" என்று கிண்டலாக தனது திருமண வாழ்க்கை குறித்து கூறியுள்ளார். அவரது இந்த பதில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.