தென்னிந்திய அலையை தடுத்து நிறுத்தியது ஷாருக் கானின் பதான்… ராம் கோபால் வர்மா கருத்து!

Webdunia
வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (08:24 IST)
கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட்டில் இந்தி மொழி படங்கள் வரிசையாக தோல்வி அடைந்தன. அதிலும் குறிப்பாக இந்தி சூப்பர் ஸ்டார் நடிகர்கள் படங்கள் வரிசையாக ப்ளாப் ஆகின.

ஆனால் தென்னிந்தியாவில் இருந்து உருவான ஆர் ஆர் ஆர், கே ஜி எஃப் மற்றும் புஷ்பா போன்ற படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியை ஈட்டின. இதனால் இனிமேல் பாலிவுட் படங்கள் வெற்றி பெறாது என்பது போன்ற பேச்சுகள் எழுந்தன.

ஆனால் அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தது ஷாருக் கானின் பதான் திரைப்படம். அது பற்றி பேசியுள்ள இயக்குனர் ராம் கோபால் வர்மா “வடக்கு மற்றும் தெற்கு என்பது  விஷயம் இல்லை. படங்கள் தான் முக்கியம். தென்னிந்திய படங்கள் வெற்றி பெறும் என்ற பேச்சை ஷாருக்கானின் பதான் திரைப்படம் நிறுத்தியுள்ளது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்