கனடா நாட்டைச் சேர்ந்த சன்னி லியோன், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். ஆபாசப் படங்களில் நடித்துள்ள அவர் தற்போது பாலிவுட்டில் நடித்து வருகிறார். தமிழில் கூட ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார்.
பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி ஹீரோயினாக வலம் வருபவர் நடிகை சன்னி லியோன். பாலிவுட்டில் நாயகி கேரக்டரில் நடித்து வருகிறார். தற்போது அவருக்கு தெலுங்கு, கன்னட படங்களில் குத்து பாடலுக்கு மட்டும் நடனமாடும் வாய்ப்பு அவ்வப்போது கிடைத்து வருகிறது. அந்த வகையில், ‘டிகே’, ‘லூ அலியா’ போன்ற கன்னட படங்களில் குத்துப்பாட்டுக்கு நடனமாடியுள்ளார்.
தெலுங்கில் ‘கரண்ட் தீகா’ என்ற படத்திலும் ஆடியுள்ளார் சன்னிலியோன். மேலும், இந்த படத்தில் கிஷோர் வில்லனாக நடிக்கிறார். அதையடுத்து தற்போது டாக்டர் ராஜசேகர் நடித்து வரும் ‘பிஎஸ்வி கருட வேகா’ என்ற தெலுங்கு படத்திலும் ராஜசேகருடன் ஒரு குத்து பாடலுக்கு ஆடியுள்ளார்.