“குழந்தைகளுக்குப் பிடித்தால்தான் படம் ஹிட்” – சூரி

Webdunia
வியாழன், 25 மே 2017 (15:46 IST)
“எந்தப் படத்தின் காமெடிகள் குழந்தைகளுக்குப் பிடிக்கிறதோ, அந்தப் படங்கள்தான் ஹிட்டாகும்” என காமெடி நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.



பல படங்களில் ஹீரோக்களுக்கு நண்பனாக நடித்த காமெடியன் சந்தானம், இப்போது ஹீரோவாகி விட்டார். எனவே, சூரி, சதீஷ் என ஒருசில காமெடியன்கள் மட்டுமே களத்தில் இருக்கின்றனர். அதில், டாப்பில் இருக்கிறார் சூரி. ஒவ்வொரு வாரமும் அவர் நடிப்பில் ஒரு படமாவது ரிலீஸ் ஆகிவிடுகிறது. ஆனாலும், சமீபத்திய சில படங்களில் அவருடைய காமெடி எடுபடவில்லை. ஆனால், ஜீவாவுடன் நடித்த ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தில், சூரியின் காமெடி பட்டையைக் கிளப்பியிருக்கிறது.

இந்நிலையில், தன் படங்கள் பற்றி, தன்னுடைய மகளிடம் கருத்து கேட்பதாகக் கூறியுள்ளார் சூரி. “ஒரு படம் குழந்தைகளுக்குப் பிடித்திருந்தால் தான் அது சூப்பர் ஹிட். என் படங்களைப் பற்றி என் மகளிடம் கேட்பேன். அதிலுள்ள காமெடிக் காட்சிகளை அவள் வரிசையாகச் சொன்னால், அந்தப் படம் சூப்பராக ஓடும் என்று உணர்ந்து கொள்வேன்” என்று தெரிவித்துள்ளார் சூரி.
 
அடுத்த கட்டுரையில்