என்னிடம் மரியாதைக்குக் கூட ஒருவார்த்தை சொல்லவில்லை – விஸ்வாசம் தீம் மியூசிக் குறித்து இமான் ஆதங்கம் !

Webdunia
செவ்வாய், 15 அக்டோபர் 2019 (18:46 IST)
விஸ்வாசம் படத்தின் தீம் மியூசிக்கை மார்ஜாவன் என்ற இந்திப் படத்தில் பயன்படுத்தியது குறித்து இமான் ஆதங்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் வெளியான மார்ஜவான் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. பாலிவுட் இயக்குனர் மிலாப் சவாரி இயக்கியுள்ள இந்த படத்தில் ரித்தேஷ் தேஷ்முக், சித்தார்த் மல்ஹோத்ரா, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்துள்ளனர். ஆனால் ஒரு விஷயத்துக்காக அந்த டிரைலர் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

டிரைலரில் இடம்பெற்றுள்ள தீம் மியுசிக் விஸ்வாசம் படத்தின் மியுசிக்காகும். டிரைலரில் இமான் பெயரும் இடம்பெற்றிருந்தது. விஸ்வாசம்' படத்தின் பாடல் உரிமைகளை வாங்கிய லஹரி மியூஸிக் நிறுவனத்தின் உரிமையாளர்களான டி சீரிஸ் தான் ’மர்ஜாவன்’ படத்தின் தயாரிப்பாளர்கள். ஆனால் இது பற்றி தனக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என இமான் ஆதங்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவர் சமீபத்தில் அளித்த நேர்காணலில் ‘சர்ச்சைகள் உருவான பின்னரே எனது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. நான் அவர்களிடம் பணம் எதுவும் கேட்கவில்லை. ஆனால் மரியாதைக்கு கூட என்னிடம் ஒரு வார்த்தை சொல்லவில்லை. என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எதுவும் செய்யமாட்டார்கள் என்ற மனநிலை அவர்களிடம் உள்ளது. அது மாற வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்