இளையராஜா பயோபிக்குக்காக ரஜினிகாந்தை சந்தித்த இயக்குனர் அருண் மாதேஸ்வரன்!

vinoth
திங்கள், 20 மே 2024 (14:21 IST)
இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த படத்தை இளையராஜாவோடு இணைந்து கனெக்ட் மீடியாவோடு தயாரிக்கிறார். இந்த படத்தில் தனுஷ் இளையராஜாவாக நடிக்க, அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். கமல்ஹாசன் திரைக்கதை எழுத உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் தொடக்க விழாவில் வெற்றிமாறன், கமல்ஹாசன் மற்றும் பாரதிராஜா உள்ளிட்ட தமிழ் சினிமா பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இந்த பட அறிவிப்பு கோடிக்கணக்கான இளையராஜா ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் முதல் லுக் போஸ்டரும் வெளியாகி வைரல் ஆனது.

இந்நிலையில் இப்போது அந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தின் திரைக்கதைக்காக இயக்குனர் அருண், இளையராஜாவின் நெருங்கிய நண்பர்களை சந்தித்து தகவல்களை திரட்டி வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் அருண் ரஜினிகாந்தை சந்தித்து பேசியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதே போல கமல்ஹாசனைவும் சந்திக்க தேதி கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்