என்ன வெச்சு நீங்க வீடியோ பண்ணுன நேரத்துல.. நான் என்ன பண்ணேன் தெரியுமா? – இளையராஜா வெளியிட்ட வீடியோ!

Prasanth Karthick

வியாழன், 16 மே 2024 (18:44 IST)
இன்று மாலை தனது ரசிகர்களுக்கு முக்கியமான அறிவிப்பை வெளியிடுவதாக சொல்லியிருந்த இசையமைப்பாளர் இளையராஜா தற்போது அதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.



தமிழ் சினிமாவில் அறிமுகம் தேவையில்லாத இசையமைப்பாளர் இளையராஜா. பலரும் அவரையும், அவரது பாடல்களையும் தேவ ராகமாகவே கொண்டாடி வருகின்றனர். ஆனால் அதேசமயம் அடிக்கடி இளையராஜா பேசும் விஷயங்கள் சர்ச்சைக்குள்ளாவதும் உண்டு. சமீபமாக இளையராஜா ராயல்டி தொடர்பாக வழக்குத் தொடர்ந்திருந்தது சர்ச்சைகளுக்கு உள்ளானது.

இதனால் சோசியல் மீடியாக்களில் இளையராஜாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் ஏராளமான வாக்குவாதங்கள் தொடர்ந்து வந்தது. அதேசமயம் AI டெக்னாலஜியை வைத்துக் கொண்டு இளையராஜா பல்வேறு பாடல்களுக்கு நடனமாடுவது போல சிலர் வெளியிட்டு வந்த வீடியோக்களும் சோசியல் மீடியாக்களில் ட்ரெண்டாகி வந்தது. அவை இளையராஜாவின் பார்வைக்குமே சென்றடைந்திருக்கின்றது.

தற்போது ஒரு அறிவிப்பு வீடியோவை வெளியிட்டுள்ள அவர் “என்னை வைத்து பலரும் பலவாறாக வீடியோக்கள் செய்து வெளியிட்டுள்ளனர். அவை நண்பர்கள் மூலமாக எனக்கும் காண கிடைத்தது. நீங்கள் இப்படி வீடியோ செய்து கொண்டிருந்த நேரத்தில் நான் முழுதாக ஒரு சிம்போனியையே முடித்துவிட்டேன்.

ALSO READ: இளையராஜாவை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ்.. என்ன காரணம்?

திரையிசை பணிகளுக்கு நடுவேயும் இதை நான் வெற்றிகரமாக செய்து முடித்தேன். சிம்போனி என்பது திரையிசை பாடல்களை போன்றோ, பின்னணி இசை போன்றோ அல்லாமல் தனித்து இருப்பது. இதன் தாக்கம் எதுவும் இல்லாமல் சிம்பொனிக்கான இலக்கணங்களுடன் சரியாக அதை நான் அமைத்துள்ளேன் என்பதை எனது ரசிகர்களுடன் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

பெரும் இசை மேதைகள் தாங்களாகவே சிம்பொனி உருவாக்கியது உண்டு. இத்தனை ஆண்டு கால இசை வாழ்க்கையில் திரையிசை பாடல்களை தாண்டி திருவாசக ஆல்பம், ரமண மணிமாலை போன்றவற்றை இளையராஜா செய்திருந்தாலும், இதுவே அவரது முதல் சிம்பொனி ஆகும். அதை எப்போது எப்படி வெளியிடுகிறார் என்பதை விரைவில் அறிவிப்பார் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

Edit by Prasanth.K

pic.twitter.com/6Bkj59HOhi

— Ilaiyaraaja (@ilaiyaraaja) May 16, 2024

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்