இளையராஜாவை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ்.. என்ன காரணம்?

Mahendran

வியாழன், 16 மே 2024 (17:52 IST)
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் இசைஞானி இளையராஜாவை சந்தித்ததாக அவருடன் எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார். இந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
 
தமிழர்களின் பெருமை அய்யா இசைஞானி இளையராஜா அவர்களை அன்பின் நிமித்தமாக சந்தித்தோம்.பெண் கல்வியையும், பெண் உரிமையையும் வலியுறுத்தும் விதமாக 
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையால் ‘பெண்-கல்வி, உரிமைகள், விடுதலை’ எனும் தலைப்பில் விழிப்புணர்வு பாடல் தயாரிக்கப்பட்டது. 
 
அப்பாடல் உருவாக்கத்தில் சகோதரி பவதாரிணி அவர்களின் இசை பங்களிப்புக் குறித்து நன்றியோடு எடுத்துரைத்தோம். அன்போடு வரவேற்று இசையோடு எங்களை வழியனுப்பி வைத்தார். இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பகிர்ந்துள்ளார்.
 
மேலும் பவதாரிணி இசையில் சுகிர்தராணி பாடல் வரிகளில் உண்டான பெண் கல்வி உரிமைகள் விடுதலை என்ற பாடலின் வீடியோவையும் அவர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்