மோடி பயோபிக்கில் சத்யராஜ் நடிப்பதாக பரவிய வதந்தி… கொளுத்திப் போட்டது அவர் மகள்தானா?

vinoth

திங்கள், 20 மே 2024 (08:13 IST)
சமீபகாலமாக இந்திய சினிமாவில் அதிகளவில் பயோபிக் படங்கள் உருவாகி வருகின்றன. இதில் விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோரின் பயோபிக்குகள் அதிகளவில் எடுக்கப்படுகின்றன. சமீபத்தில் சச்சின், தோனி, மன்மோகன் சிங், சாவர்க்கர், ராஜசேகர் ரெட்டி ஆகியோரின் பயோபிக்குகள் உருவாகின.

இந்நிலையில் விரைவில் மோடி பயோபிக் உருவாக உள்ளதாகவும் அதில் சத்யராஜ் மோடி வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்பட்டது. பகுத்தறிவு கொள்கையில் தீவிரமாக இருக்கும் நடிகர் சத்யராஜ் இந்துத்துவா கொள்கையில் தீவிரமாக இருக்கும் பிரதமர் மோடியின் கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் இதுபற்றி விசாரித்த போது சத்யராஜ் தரப்பு இதை மறுத்துள்ளார்களாம். அப்புறம் எப்படி இந்த தகவல் பரவியது என்றால் சத்யராஜின் மகள் திவ்யாதா பிரபல மக்கள் தொடர்பாளரிடம் இப்படி ஒரு தவலை சொல்லி வெளியிட சொன்னாராம். அதனால் இதில் உண்மை என்ன என்பது தெரியவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்