கொரோனா இல்லையென்றால் இன்று படம் ரிலீஸ் ஆகியிருக்கும்: கார்த்திக் சுப்புராஜ் வருத்தம்

Webdunia
வெள்ளி, 1 மே 2020 (13:32 IST)
கொரோனா இல்லையென்றால் இன்று படம் ரிலீஸ் ஆகியிருக்கும்
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகிய ’ஜகமே தந்திரம்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டனிலும் சென்னையிலும் கடந்த ஜனவரி மாதமே  முடிவடைந்தது. இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் ஒருபக்கம் சென்னையிலும், இன்னொரு பக்கம் லண்டனில் சவுண்ட் மிக்சிங் பணிகளும் நடந்து வந்த நிலையில் கொரோனா காரணமாக இந்த படத்தின் அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டன. எனவே இந்த படம் இன்று அதாவது மே 1ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் அது நடக்காமல் போனது
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லையெனில் இன்று இந்த படம் ரிலீஸ் ஆகியிருக்கும் என்றும் இருப்பினும் விரைவில் ஜகம் சுகமடைந்ததும் ஜகமே தந்திரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
தனுஷ் ஜோடியாக சஞ்சனா நடராஜன் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ வில்லனாக நடித்துள்ளார். மேலும் கலையரசன், உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்