ஹீரோக்களிடம் அடிவாங்க என்னால் முடியாது; அருண் விஜய்

Webdunia
வெள்ளி, 13 ஜூலை 2018 (18:11 IST)
அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் மாஸ் வில்லனாக நடித்திருந்தவர் நடிகர் அருண் விஜய். அந்த கதாபாத்திரத்தில் நல்ல பெயரும் கிடைத்தது  அவருக்கு. இவர் தற்போது ஒரு சில சின்ன படங்களில் நடித்து வருகிறார். பல படங்களில் கதாநாயகனாக நடித்து, என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக  மிரட்டினார்.
இந்நிலையில் அருண் விஜய், ஹீரோக்களிடம் அடிவாங்க நான் சினிமாவிற்கு வரவில்லை என்று கூறியிருக்கிறார்.
 
அருண் விஜய் மூத்த நடிகர் விஜய்குமாரின் மகன் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனாலும் தனது கடின உழைப்பால் தொடர்ந்து வளர்ந்து வருகிறார். என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு வில்லனாக மிரட்டியவர், அதற்கு பிறகு அப்படி நடிக்கவில்லை. ஆனால் அதற்கு பிறகு இப்போதுள்ள முன்னணி நடிகர்கள் பலர்  என்னை வில்லனாக நடிக்கவைக்க அணுகினார்கள். பெரிய அளவு சம்பளம் தருவதாகவும் கூறிகிறார்கள்.

எதுவும் ‘என்னை அறிந்தால்’ விக்டர் கதாபாத்திரம் அளவுக்குக் கனமாக இல்லை. அதனால் மறுத்துவிட்டேன். தவிர பணத்துக்காகச் சொதப்பலான கேரக்டர்களில் நடித்து ஹீரோக்களிடம் அடிவாங்க நான்  சினிமாவுக்கு வரவில்லை’ என்று கூறி இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்