அஜித் வில்லனுக்காக ‘பாகுபலி’ பிரபாஸ் செய்யும் உதவி

வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (13:53 IST)
அருண் விஜய் நடித்துள்ள ‘குற்றம் 23’ படத்தின் தெலுங்கு டிரெய்லரை வெளியிடுகிறார் பிரபாஸ்.

 
கெளதம் மேனன் இயக்கிய ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்தவர் அருண் விஜய். அதற்கு முன் பல படங்களில் அவர் நடித்திருந்தாலும், இந்தப் படம்தான் அவரை அடையாளம் காட்டியது. அதன்பிறகு ஹீரோவாக ‘குற்றம் 23’ படத்தில் நடித்தார். கடந்த வருடம் மார்ச் மாதம் 3ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸானது. மகிமா நம்பியார், அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.
 
தமிழில் வெற்றி பெற்ற இந்தப் படத்தை, தெலுங்கில் டப் செய்து வெளியிடுகின்றனர். டப் செய்யப்பட்ட தெலுங்கு டிரெய்லரை, இன்று மாலை 5.30 மணிக்கு ‘பாகுபலி’ பிரபாஸ் தன்னுடைய ட்விட்டரில் வெளியிடுகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்