‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியின் இரண்டாவது பாட்டு இன்று ரிலீஸ்!

Webdunia
வியாழன், 11 ஜனவரி 2018 (14:23 IST)
‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இசையமைத்துள்ள படத்தில் இருந்து இரண்டாவது பாடல் இன்று ரிலீஸாக இருக்கிறது.
சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கலகலப்பு 2’. ஜெய், ஜீவா, ‘மிர்ச்சி’ சிவா, கேத்ரின் தெரேசா, நிக்கி கல்ரானி, நந்திதா ஸ்வேதா, ரோபோ சங்கர், சதீஷ், வையாபுரி, மனோபாலா, விடிவி கணேஷ், சந்தான பாரதி, காஜல் பசுபதி ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
 
அவ்னி சினிமேக்ஸ் சார்பில் குஷ்பூ தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு, ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இசையமைத்துள்ளார். இந்தப்  படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஒரு குச்சி ஒரு குல்பி’ பாடல் ஏற்கெனவே ரிலீஸான நிலையில், இன்னொரு பாடலான ‘காரைக்குடி இளவரசி’ இன்று மாலை ரிலீஸாகும் எனத் தெரிவித்துள்ளது படக்குழு.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்