அடுத்த படத்திற்கு தயாரான ஹிப் ஹாப் ஆதி

வெள்ளி, 15 டிசம்பர் 2017 (15:47 IST)
தமிழ்த் திரைப்படங்களில் இசையமைத்து வந்த `மீசைய முறுக்கு' படத்தின் மூலம் நாயனாக அறிமுகமானவர். இவரின் அடுத்த  படம் பூஜைநேற்று தொடங்கியது.
ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கி, நாயகனாக அறிமுகமான படம் `மீசைய முறுக்கு'. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அடுத்த படத்தையும் சுந்தர்.சி தனது சொந்த நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். பார்த்திபன் பெரியசாமி  என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் இந்த திரைப்படத்தில் ஹாக்கி விளையாட்டை மையமாக வைத்து உருவாக இருக்கிறது. இதில் ஆதி ஹாக்கி வீரராக நடிக்க உள்ளார். இந்த படத்திற்கான பூஜை சென்னையில் நேற்று நடைபெற்றதாக ஆதி அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 
இப்பட பூஜையில் நடிகர் ஹிப் ஹாப் ஆதி, இயக்குநரும், நடிகருமான பாண்டியராஜன், ஷாரா, விஜய் விருஸ், பென்னி ஆலிவர், கவுசிக் கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்