என்னது கோட் படம் ஓடிடில ரிலீஸாகும் போது இவ்ளோ நேரம் ஓடுமா?... இயக்குனர் வெங்கட்பிரபு கொடுத்த அப்டேட்!

vinoth
திங்கள், 9 செப்டம்பர் 2024 (07:07 IST)
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த GOAT திரைப்படம் கடந்த செப்டம்பர் 5 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். யுவன் இசையில் சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவில் படம் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆனது.

முதல் காட்சி ரிலீஸ் ஆனதில் இருந்து படம் கலவையான விமர்சனங்களதான் பெற்று வருகிறது. ஆனால் தென்னிந்திய மாநிலங்களில் நேற்று படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது. இந்த படத்தில் பல சர்ப்ரைஸ் தருணங்கள் அமைந்துள்ளன. தமிழ்நாட்டில் இந்த படத்துக்கு மிகப்பெரிய வரவேற்புக் கிடைத்திருக்கும் நிலையில் கேரளா, ஆந்திரா மற்றும் இந்தி பேசும் மாநிலங்களில் நெகட்டிவ் விமர்சனங்கள் வரத் தொடங்கியுள்ளன.

படம் மூன்று மணிநேரம் ஓடுவதும் மிகப்பெரிய எதிர்மறைக் கருத்தாக வைக்கப்பட்டது. இந்நிலையில் படத்தின் நீளம் குறித்து பேசிய இயக்குனர் வெங்கட்பிரபு “படத்தின் ஒட்டுமொத்த நீளம் 3 மணிநேரம் 40 நிமிடமாக அமைந்தது. கண்டிப்பாக அந்த வெர்ஷனை நாம் ஓடிடியில் ரிலீஸ் செய்யவேண்டும் என தயாரிப்பாளர் அர்ச்சனா தெரிவித்துள்ளார்” எனக் கூறியுள்ளார். இதன் மூலம் கோட் திரைப்படம் மூன்று மணிநேரம் 40 நிமிடம் ஓடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்