ரஜினிக்கு Opening Song பாடிய மலேசியா வாசுதேவன்! அனிருத் செய்த AI மாயாஜாலம்! - வேட்டையன் First Single!

Prasanth Karthick
ஞாயிறு, 8 செப்டம்பர் 2024 (16:44 IST)

ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் அதன் ஓப்பனிங் பாடலை மலேசியா வாசுதேவன் குரலில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கியுள்ளார் அனிருத்.

 

 

ஜெய்பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து தயாராகியுள்ள படம் வேட்டையன். மஞ்சு வாரியர், ராணா டகுபதி, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

 

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியாகி வைரலாகியிருந்த நிலையில் அக்டோபர் 10ம் தேதி படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் பாடல்கள் வெளியீட்டிற்காக ரசிகர்கள் வெகுவாக காத்திருந்தனர்.

 

இந்நிலையில் தற்போது வேட்டையன் படத்தின் முதல் சிங்கிள் ப்ரோமோ வெளியாகியுள்ளது. பொதுவாக ரஜினிகாந்திற்கு ஓப்பனிங் பாடல்களை எஸ்.பி.பாலசுப்ரமணியம் அதிகமாக பாடியுள்ள நிலையில், இந்த படத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் எஸ்.பி.பி குரலில் பாடலை தயாரித்துள்ளதாக பேசிக் கொள்ளப்பட்டது. ஆனால் இன்ப அதிர்ச்சியாக மறைந்த பழம்பெரும் பாடகர் மலேசியா வாசுதேவன் குரலை ஏஐ மூலமாக பயன்படுத்தி ‘மனசிலாயோ’ என்ற பாடலை அனிருத் உருவாக்கியுள்ளார்.

 

தற்போது இந்த ப்ரோமோ வைரலாகி வரும் நிலையில் 27 ஆண்டுகள் கழித்து ரஜினிகாந்த் - மலேசியா வாசுதேவன் காம்போவில் ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்த பாடலுக்கு எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்