அஜித் நடித்து வரும் துணிவு படத்தின் முதல் சிங்கில் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர், நடித்துவரும் துணிவு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில், அஜித், மஞ்சுவாரியார் ஆகிய நடிகர்களின் டப்பிங் பணிகள் முடிந்துள்ளன.
சமீபத்தில், துணிவு பட இசையமைப்பாளர் ஜிப்ரான் படத்தின் முதல் சிங்கிள் பாடல் பற்றிய அப்டேட்டை கொடுத்தார். அதில் பாடல் ஆசிரியர் வைசாக் எழுதியுள்ள சில்லா சில்லா என்ற பாடலை அனிருத் குரலில் ஒலிப்பதிவு செய்துள்ளதாக அறிவித்திருந்தார்.
இப்பாடலை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள நிலையில், #ChillaChilla என்ற பாடலின் ஷூட்டிங் கடந்த புதன் கிழமை வரை தொடங்கியதாகவும், இதற்கு கல்யான் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் படத்தில் இடம்பெறும் ஒரு ப்ரோமோ பாடலை தற்போது சென்னையில் படமாக்கி வருகின்றனர். இந்த நிலையில், இயக்குனர் ஹெச்.வினோத் மற்றும் இசையமைப்பாளர் ஜிப்ரான் தன் சமூக வலைதளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், துணிவு படத்தின் இசை பற்றித் தானும், இயக்குனர் ஹெச்.வினோத் ஆகிய இருவரும் ஆலோசனை செய்ததாகவும் என் சிரிப்பே எல்லாவற்றையும் கூறிவிடும் எனப் பதிவிட்டு, இருவரின் புகைப்படத்தையும் பகிர்ந்து, அதில், தன்னைவிட வினோத் உயரமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இப்படத்தின் மேக்கிங் சிறந்த முறையில் வந்திருக்கிறது எனவும் முதல் சிங்கில், வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடலுக்குப் போட்டியாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
பொங்களுக்கு இரு படங்களும் மோதவுள்ளதால் இப்போதே இரு படங்களுக்குமான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அடுத்த வாரம் துணிவு பட முதல் சிங்கில் பற்றிய அறிவிப்பு வரலாம் என தெரிகிறது.
Edited by Sinoj
Catching up for a musical discussion after my directors hectic schedule and my smile tells everything about the film