இந்த நிலையில், அஜித், மணாலி, சார்ச்சு, லேஜ், நூர்பா, வேலி, பாங்காங்,. கார்கில், ஸ்ரீ நகர், ஜம்மு, சட்டிஷர், ஹரித்துவார், ரிசிகேஷ், கீதார் நாத், பத்ரி நாத் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்றுள்ள நிலையில், விரைவில் அஜித் இப்பயணத்தை முடித்து படப்பிடிப்பு திரும்ப உள்ளதாக தகவல் வெளியானது.
அஜித் குறித்த தகவல்களும், அவர் படத்தின் அப்டேட் கிடைக்க வேண்டுமென அஜித் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், அஜித் தன் பயணத்தின் போது, வழியில், மஞ்சு காஷ்யப்பா என்ற இளைஞரின் பைக் பஞ்சர் ஆகி நின்றுள்ளது, அதைப் பார்த்த அஜித்குமார், அதை சரி செய்து கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார். இதை மஞ்சு காஷ்யப்பா தன் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.