வெளிநாட்டு எல்லையில் சிக்கிக் கொண்ட கெளதம் மேனன்

Webdunia
ஞாயிறு, 10 செப்டம்பர் 2017 (19:20 IST)
துருவ நட்சத்திரம் படப்பிடிப்புக்காக துருக்கி சென்றுள்ள கெளதம் மேனன், அந்நாட்டு எல்லையில் சிக்கிக் கொண்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


 

 
விக்ரம் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கிவரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் படப்பிடிப்புக்காக துருக்கி சென்றுள்ளார் கெளதம் மேனன். ஜார்ஜியாவில் இருந்து இஸ்தான்புலுக்கு சாலை வழியாகச் சென்றபோது, துருக்கி நாட்டு எல்லையில் சிக்கிக் கொண்டுள்ளனர். எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு உதவி கேட்க முடியாமல் 24 மணி நேரத்துக்கும் அதிகமாகத் தவித்து வருகிறார்களாம்.
 
‘மிக அழகான துருக்கி நாட்டில் படம்பிடிக்க வந்தோம். இதைப் படிப்பவர்கள் யாராவது எங்களுக்கு உதவிசெய்ய முடியுமா என்று பாருங்கள்’ என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார் கெளதம் மேனன். கேமரா உள்ளிட்ட படப்பிடிப்பு சாதனங்களுடன் சிக்கியிருப்பதாகத் தெரிவித்துள்ள கெளதம் மேனன், உடன் எந்தெந்த நடிகர்கள் இருக்கிறார்கள் என்ற விவரத்தைத் தெரிவிக்கவில்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்