ஒரு கோடியைத் தொட்ட விக்ரம் படத்தின் டீஸர்..

புதன், 19 ஜூலை 2017 (19:29 IST)
விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் டீஸர் ஒரு கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. 


 

 
கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்தப் படத்தில், ரிது வர்மா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் என இரண்டு ஹீரோயின்கள் நடித்து வருகின்றனர். ரா.பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
 
இந்தப் படத்தின் டீஸர், கடந்த ஜனவரி மாதம் 14ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த டீஸரை, இதுவரை ஒரு கோடி பேருக்கு மேல் பார்த்துள்ளனர். நியூயார்க், குன்னூர் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் படப்பிடிப்பை முடித்துள்ள கெளதம் மேனன், மீதமுள்ள காட்சிகளை சென்னையில் எடுக்க இருக்கிறார். இன்னும் 30 நாட்கள் மட்டுமே ஷூட்டிங் மீதமிருப்பதாகத் தெரிவித்துள்ளார் கெளதம் மேனன்.

வெப்துனியாவைப் படிக்கவும்