பாஜகவில் இருந்து விலகிய பிரபல நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்?

Webdunia
ஞாயிறு, 8 ஜனவரி 2023 (10:47 IST)
பிரபல நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பாஜகவில் இருந்து விலகியுள்ளார்.

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பதவி வகித்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பாஜகவில் இருந்து  நடிகை காயத்ரி ரகுராம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் சமீபத்தில் அவர் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்

இதனைத்தொடர்ந்து,  பாஜக தலைவர் அண்ணாமலை மீது விமர்சனம் தெரிவித்து வரும் அவர், விரைவில் அதிமுக திமுக உள்ளிட்ட எந்த கட்சியிலும் அவர் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த  நிலையில் , பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும்,  தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணனும் பாஜகவில் இருந்து விலகியுள்ளது வதந்திகள் பரவி  பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், இதுகுறித்து, அவர் தன் சமூக வலைதளத்தில்,  நான் பாஜகவில் சேரவேயில்லை. பின்னர் எப்படி விலக முடியும்? மீடியா துறையிலும் சினிமாவில் பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்