2022- ஆம் ஆண்டில் வாகன விபத்து மற்றும் பலி எண்ணிக்கை 11% குறைவு- போக்குவரத்து போலீசார் தகவல்

வியாழன், 5 ஜனவரி 2023 (17:06 IST)
கடந்த 2020  மற்றும் 2021 ஆம் ஆண்டுகளை காட்டிலும் 2022 ஆம் ஆண்டில் வாகன விபத்துகள் குறைந்துள்ளதாக போக்குவரத்து போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் சாலையில் பயணிக்கும் போது வாகன ஓட்டிகள் விபத்தைக் குறைக்கும்  நோக்கில், மத்திய அரசு இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும், போக்குவத்து  விதிகளை மீறுபவர்களுக்கு அபராதத் தொகை அதிகரித்து ஒரு அறிக்கை வெளியிட்டது. சமீபத்தில் தமிழகத்திலும் இது அமல்படுத்தப்பட்டது. 

ஆனால், இதையும் மீறி சிலர் பயணித்து, விபத்தில் சிக்குகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இதுகுறித்து அறிக்கையை தமிழக போக்குவரத்து காவல்துறை வெளியிடும்,

ALSO READ: கொரோனாவை விட சாலை விபத்துகளே ஆபத்தானது: நிதின் கட்கரி
 
அந்த வகையில், கடந்த 2020  மற்றும் 2021 ஆம் ஆண்டுகளை காட்டிலும் 2022 ஆம் ஆண்டில் வாகன விபத்துகள் குறைந்துள்ளதாகவும், விபத்தினால் ஏற்படும் பலி எண்ணிக்கையும் 11% குறைந்துள்ளதாக போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது.

அதன்படி, 2030 ஆம் ஆண்டு 559 விபத்துகளும், 566 பேர் உயிரிழந்துள்ளதாகவும்; 2021 ஆம் ஆண்டு 566 விபத்துகளும், 499 பேர் பலியானதாகவும்; 2022,ம் ஆண்டு 575 விபத்துகள் நடந்துள்ளதாகவும், 507 பேர் பலியானதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்