பிக்பாஸ் வீட்டில் நுழையும் பிரபல நடிகை: ஓவியாக்கு ஈடாகுமா?

Webdunia
வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (22:30 IST)
பிக்பாஸ் வீட்டில் இருந்து ஓவியா வெளியேறிய நாள்தான் பலர் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்த கடைசி நாளாக இருந்துள்ளது என்பது அந்த நிகழ்ச்சிக்கு குறைந்துவரும் டி.ஆர்.பியில் இருந்து தெரிய வருகிறது. சுவாரஸ்யம் இல்லாத காட்சிகள், பார்த்த முகத்தையே பார்த்து வெறுப்படைந்த பார்வையாளர்கள் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை மறக்க ஆரம்பித்துவிட்டனர்.



 
 
இந்த நிலையில் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு புத்துணர்வு கொடுக்க பிரபல நடிகையை ஆகஸ்ட் 15 முதல் களமிறக்கவுள்ளதாகவும், இதற்காக கோடியை நெருங்கும் அளவுக்கு ஒரு தொகை கைமாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
அந்த பிரபல நடிகை யார் என்று சஸ்பென்ஸ் ஆக வைத்திருக்கும் விஜய் டிவி இன்னும் ஓரிரு நாட்களில் புரமோவில் அறிவிக்கவுள்ளார்களாம். புதிய வரவுக்கு பின்னராவது பிக்பாஸ் நிகழ்ச்சி தேறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்