இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

Siva

வெள்ளி, 9 மே 2025 (18:01 IST)
இந்திய ராணுவம் வெற்றிகரமாக ஆபரேஷன் சிஃதூர் என்ற தாக்குதலை முடித்து தீவிரவாத முகாம்களை அழித்த நிலையில், ஏராளமான அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள், தொழிலதிபர்கள் இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர்.
 
தமிழ் திரையுலகை பொருத்தவரை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல நடிகர்கள் ராணுவத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
 
ஆனால் பாலிவுட் திரை உலகில் உள்ள அமீர்கான், ஷாருக்கான், சல்மான்கான் உள்பட பல நடிகர்கள் வாயை மூடி மௌனமாக இருப்பதை நடிகை Falaq Naaz சுட்டிக்காட்டி உள்ளார். 
 
முஸ்லிம் நடிகர்கள் ஏன் இந்தியாவுக்கு ஆதரவு கொடுக்காமல் மௌனமாக இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை என்றும், இவர்களுக்கும் பாகிஸ்தானுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்குமா என்றும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்