இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில் நடிகை ஆண்ட்ரியா பதிவிட்டுள்ள பாலஸ்தீன கவிதை வைரலாகி வருகிறது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. அதை தொடர்ந்து இந்தியாவின் சிவிலியன் பகுதிகள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சித்து வரும் நிலையில் அதையும் இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.
இதற்கிடையே இந்தியா போரில் வெற்றி பெற வேண்டும் என பலரும் பிரார்த்தனை செய்து வரும் நிலையில், போரினால் இரு நாடுகளிலும் உள்ள சாதாரண மக்கள் பாதிக்கப்படும் நிலை குறித்து சிலர் வருத்தத்தையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் போர் சூழல் குறித்து நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாக்கிராமில் ஒரு பாலஸ்தீன கவிதையை பகிர்ந்துள்ளார்.
போர் ஒருநாள் முடிவடையும் தலைவர்கள் கைகுலுக்கிக் கொள்வார்கள்
இறந்துபோன மகனின் வருகைக்காக
வயதான தாய் காத்திருப்பாள்
காதல் கணவனை எதிர்பார்த்து காத்திருப்பாள் அந்தப் பெண்
அந்தக் குழந்தைகள்
தங்கள் சாகச அப்பாவின் வருகையை எதிர்பார்த்து காத்திருப்பார்கள்
எங்கள் மண்ணை யார் விற்றார்கள் என எனக்குத் தெரியாது - ஆனால், அதற்கான விலையை
யார் தருகிறார்கள் என்பதற்கு
சாட்சி நான்
- மெஹமுத் டார்விஷ், பாலஸ்தீனிய கவிஞர்
என்ற கவிதையை பகிர்ந்துள்ளார். அவரை தொடர்ந்து மேலும் பலரும் சமூக வலைதளங்களில் இந்த கவிதையை பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.
Edit by Prasanth.K